Monday, February 21, 2011

கோயில் மாடும் பிரேமானந்தாவின் மரணமும்.

1990 களில் கொலை மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட மக்கள் விரோ நடவடிக்கைகளால் பொது மக்களின் செருப்படிக்கு ஆளானவன் பிரேமானந்தா சாமியார். ஆண்டுகள் பல ஆனாலும் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் இவனது பித்தலாட்டங்களை இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

இவனது குற்றச் செயலுக்கு நீதி மன்றம் இரட்டை ஆயுள் தண்டை வழங்கிய போது மகிழ்ச்சியடையாதவர்களே கிடையாது. காவல் துறை பாதுகாப்பு அளித்திராவிட்டால் பொதுமக்களாலேயே அவன் அடித்துக் கொல்லப்பட்டிருப்பான். அன்றே செத்துத் தொலைய வேண்டியவன் அரசுக்கு ஏராளானமாக பொருட் செலவை ஏற்படுத்திவிட்டு இப்பொழுது நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலனின்றி செத்துப் போயுள்ளான். இவனுக்காக யாராவது கண்ணீா் வடிப்பார்களா?

ஆனாலும் ஒருவர் கண்ணீர் வடித்துள்ளார். பிரேமானந்தா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமாம். கோவையில் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்குக்கூட தமிழக அரசு பொது மன்னிப்பு வழங்கியதாம். ஆனால் பிரேமானந்தா சாமியாருக்கு மருத்துவச் சிகிச்சைக்குக்கூட விடுதலை செய்யவில்லையாம். அதாவது நோய்வாய்ப்பட்டுவிட்டால் விடுதலை செய்ய வேண்டுமாம்.

இது இந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநிலத் தலைவர் அர்ஜீன் சம்பத்தின் கவலை. இது இன்றைய தினமணிச் செய்தி.

இவரது கூற்றுப்படி அரசு நடந்து கொண்டால் பித்தலாட்டக்காரன் ஒருவன்கூட சிறையில் இருக்க மாட்டான். கைது என்றவுடனே நெஞ்சுவலி வருவதுதானே பித்தலாட்டக்காரர்களுக்குக் கைவந்த கலை.

பிரேமானந்தா சாமியாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என சந்தேகம் எழுந்துள்ளதாம். எனவே பிரேமானந்தாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமாம். அவன் அடிக்கடி மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான் என்கிற செய்திகள் அவ்வப்பொழுது ஊடகங்களில் வரத்தானே செய்தன. பிறகு எப்படி அர்ஜீன் சம்பத்துக்கு மட்டும் சந்தேகம் வருகிறது. மருத்துவ வசதியே செய்திருக்கவில்லை என்றால் அவன் பத்து ஆண்டுகளுக்கு முன்பே செத்துப் போயிருப்பான். தமிழக அரசின் தயவால் அவன் பத்து ஆண்டுகள் அரசுக்கு செலவு வைத்துவிட்டுத்தான் செத்திருக்கிறான்.

பிரேமானந்தாவின் மரணம் குறித்து நீதி விசாரணை கேட்பது மட்டுமல்ல பிரேமானந்தாவோடு சிறையில் அடைக்கப்பட்ட சுவாமி கமலானந்தா உள்பட அனைவருக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டுமாம். 

ஏனய்யா கோயில் மாடுகளை சிறையில் அடைக்கிறீர்கள் என்று கேட்கிறார். கோயில் மாடுகள் என்ன செய்தாலும் அது குற்றமாகாது என்பதுதானே இந்து மதம் மக்களுக்கு போதித்துள்ள நீதி். கோயில் மாடுகள் வயலை மேய்ந்தாலோ, தோட்டங்களை சேதப்படுத்தினாலோ அதை யாரும் அடிக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அது தெவ்வக் குற்றம். இப்படித்தானே கிராமப் புறங்களில் இன்றும் கோயில் மாடுகள் நடத்தப்படுகின்றன.

ஊர்ப் பயிரை மேய்ந்து தின்று கொழுத்து தன் விருப்பம் போல பசுக்களையும், கெடேரிகளையும் வன்புணர்ச்சி கொள்வதே கோயில் மாடுகளின் ஒரே தலையாயப் பணி. இதே நீதிதான் சாமியார்களுக்கும் வழங்கப்பட வேண்டுமாம். இந்த நீதியைத்தான் அர்ஜீன் சம்பத் நிலைநாட்ட விரும்புகிறார். கோயில் மாடுகளுக்கு இருக்கும் சுதந்திரம் சாமியார்களுக்கு இல்லையே என ரொம்பவும்தான் வருத்தப் படுகிறார் அர்ஜீன் சம்பத்.

2 comments:

  1. பிரேமானந்தா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமாம். கோவையில் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்குக்கூட தமிழக அரசு பொது மன்னிப்பு வழங்கியதாம்.
    true true 100% true

    ReplyDelete
  2. இப்படிப் பட்ட கோணங்கிகளால் தால் இந்த ஊத்தைகள் எல்லாம் காவி கட்டி அலைகிறார்கள்.
    இப்படியே சங்கராச்சாரி; நிதியானந்தன்;சாயிபாபா; கல்கி, அம்மா சும்மா....எல்லோரையும் விசாரணை
    நடத்தி கூட்டில் போட அரபு நாடுகளில் தொடங்கிய கிளச்சி போல் தொடங்க வேண்டும்.
    ஆனால் இதைச் செய்யவேண்டிய இளைஞர்களே காவிக் கோவணங்களிடம் புத்தியை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டு, அவர்கள் கொடுக்கும் போதைக்கும், காம சுதந்திரத்துக்கும் அலைகிறதே!
    காவியுடன் கூடினால்; முன்னாள் நடிகையுடன் கூடலாம் என நாக்கைத் தொங்க விட்டு அலைகிறார்களே!
    நித்தியானந்தனின் காவிக்குள் இருந்த வெள்ளைக் கோவணத்தைத் தெளிவாகப் பார்த்த பின்னும் இந்த முண்டங்கள் திருந்தவில்லை; அவன் மார்பிங்காமென பேட்டி கொடுக்கிறான். ஆனால் முதல் காமத்துடன் கடவுள் பொருந்துமா? என ஆய்வில் ரஞ்சிதாவுடன் இருந்தேன் என்றவனும் இவனே!
    எல்லோரையும் இவன் கேணைகள் என ;காவிக் கோவணத்தைப் பிடிப்போரை நம்பி இருக்கிறான் ;இதை மாற்றவேண்டும்.
    பேட்டி எடுப்போர் குறுக்குக் கேள்வியே கேட்பதாகத் தெரியவில்லை.
    சங்கராச்சரி ஆடாத ஆட்டமெல்லாம் நேபாளம் வரை ஆடிவிட்டு; இப்போது பல்லக்கில் வருகிறான்.
    செம்மறிகள் சுமக்கின்றன.
    சீ இந்தச் சென்மங்கள் திருந்தாது.

    ReplyDelete