Thursday, November 22, 2012

நாளேடுகளில்.....! சொன்னதும் சொல்லாததும்!


சொன்னது
“நீ ராசி இல்லாதவள் என்று கூறியதால் ராணுவ வீரரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை! திருமணமான ஐந்து மாதத்தில் பரிதாபம்!”

சொல்லாதது
ராணுவ ‘வீரனை’ இதற்காக உள்ளே தள்ளலாம். ராசி பலன்கனை நம்ப வைக்கும் சோதிடக்காரர்களையும் அவைகளைப் பரப்பும் ஊடகங்களையும் எங்கே தள்ளுவது?

சொன்னது
“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது! வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சத்து நாற்பதாயிரம் ஏமாற்றி விட்டதாகவும், பணத்தை திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார்!”

சொல்லாதது
ஆட்சி அதிகாரம் ஏதும் இல்லை என்றாலும் அல்லக்கைகள் ‘வெள்ளையும் சொள்ளையுமாக‘ ஸ்கார்பியோவில் திரிவதன் ரகசியம் இதுதானோ!

சொன்னது
“தருமபுரி கலவரத்துக்கு பா.ம.க காரணம் அல்ல! தாக்குதல் நடத்தியவர்களில் நாயுடு, செட்டியார், குறும்பர் என அனைத்து சுமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் அடங்குவர். பா.ம.க.மட்டுமல்ல எல்லா கட்சியினரும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்!” டாக்டர் ராமதாஸ் பேட்டி!

சொல்லாதது
இப்படி நீங்களே குற்றத்தை ஒப்புக் கொண்ட பின் எதற்காக “மைனர் கல்லாணம்” என்கிற தகிடு தத்தங்கள்?

சொன்னது
“சுசி ஈமு பண்ணை நிர்வாக இயக்குநர் குரு குண்டர் சட்டத்தில் கைது!
இவர் மீது மோசடி வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன!”

சொல்லாதது
பால்தாக்கரே மரணத்தையொட்டி வெளியான மிகச்சாதாரண ஒரு செய்திக்கு ‘லைக்’ கொடுத்ததற்கே கைது செய்கிறீர்களே! கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் ஈமு கோழி பண்ணைகளை மக்கள் ‘லைக்’ பண்ணக் காரணமான ஊடகங்களை என்ன செய்வது?

3 comments:

  1. சொல்லாததை நல்லாவே சொல்லிட்டீங்க...

    ReplyDelete
  2. இது மைனர் கல்யாணமே அல்ல! ஒருத்தர் அவர் பாட்டுக்கு மைனர் கல்லாணம் என்று அளந்து கொண்டிருக்கிறார்.

    [[ இப்படி நீங்களே குற்றத்தை ஒப்புக் கொண்ட பின் எதற்காக “மைனர் கல்லாணம்” என்கிற தகிடு தத்தங்கள்?]]

    ReplyDelete