Friday, February 7, 2014

இதுவா பொது அமைதி?

·         அனுமதியின்றி மது விற்பனை: இளைஞர் கைது
·        மூன்று செம்மரங்கள் வெட்டிச் சாய்ப்பு
·         பைக் திருட்டு: இளைஞர் கைது
·         மணல் கடத்தல்: இளைஞர் கைது
·         மின் கம்பி திருட்டு
·         பேனர் கிழிப்பால் மோதல்: நான்கு பேர் காயம்
·         மூதாட்டி மர்மச் சாவு
·         மதுக்கடையில் தகராறு: ஒருவர் காயம்
·         சாராயம் விற்பனை: இளம் பெண் கைது
இது 2014 ஜனவரி மூன்றில் தினமணி ஏட்டின்  கிரைம் செய்திகள்.

·         தமிழகத்தில் பொது அமைதி சிறப்பாக பராமறிக்கப்படுகிறது.

இது 2014 ஜனவரி நான்கில் தினமணி ஏட்டில் வெளியான தமிழக அரசின் அறிவிப்புச் செய்தி.

·         நில அபகரிப்பு வழக்கு: தந்தை, இரு மகன்கள் கைது

·         தாய், மகள் திடீர் மாயம்

·         ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

·         பொறியாளர் மீது தாக்குதல்: இருவர் கைது

·         ரயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு

·         மணல் லாரி மோதி தொழிலாளி சாவு

·         விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு

·         பெண் காவலர் கழுத்து நெறித்துக் கொலை

இது 2014 ஜனவரி ஏழில் தினமணி ஏட்டின்  கிரைம் செய்திகள். 

தற்போது குற்றச் செய்திகளுக்காக ஒரு தனி பகுதியையே தினமணி ஒதுக்கி இருக்கிறது. இவை தமிழகத்தில் எட்டு நகரங்களிலிலிருந்து வெளியாகும் தினமணியில் ஒரு நகரிலிருந்து மட்டுமே வெளியான செய்திகள் மட்டுமே. இச்செய்திகள்கூட காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு வரட்பட்ட அங்கிருந்து கசிந்த ஒரு சிறு துளிகள் மட்டுமே.

பிற ஏழு நகரங்களிலிருந்து வெளியாகும் தினமணியின் கிரைம் செய்திகளையும், தினத்தந்தி, தினகரன், தினமலர், மாலைமலர், மாலைமுரசு, இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் ஹெரால்டு உள்ளிட்ட ஏனைய செய்தி ஏடுகளில் வரும் கிரைம் செய்திகளையும், தொலைக்காட்சி ஊடகங்கள் உள்ளிட்ட பிற ஊடகங்களில் வெளியாகும் கிரைம் செய்திகளையும் தொகுத்துப் பாருங்கள் தமிழகத்தின் அவலம் புரியும்.
 
மூன்றுக்கும் ஏழுக்கும் நடுவில் மட்டுமே இந்த நிலை என்றால் 365 நாட்களுக்கும்?
 
அதுவும் காவல் துறையின் கவனத்திற்கு வராத குற்றங்களையும் சேர்த்து கணக்கிட்டால் நாளேடுகளில் பக்கங்களும் போதாது. நாளேடுகளும் போதாது. 
 
இந்த லட்சணத்தில் தமிழகத்தில் பொது அமைதி சிறப்பாக பராமறிக்கப்படுகிறதாம்.

8 comments:

  1. இதை விட எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடைகள் திறக்கக்கூடாது என்று போராட்டம் செய்பவர்களை காவல் துறை அடித்து விரட்டும் காட்சிகள் தான் அதிக ஆச்சரியம் தருகின்றது.

    இந்த தளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றேன். நீண்ட நேர பயணங்களில் தரவிறக்கம் செய்து படிக்க முடியும்.

    http://freetamilebooks.com/

    ReplyDelete
  2. புதிய தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2015/01/1_20.html?showComment=1421714790870#c142186046049912880
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இன்றுதான் பார்த்தேன்.செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி!

      Delete
  4. மனோ சாமிநாதன் தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதையறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.com
    www.ponnibuddha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. இன்றுதான் பார்த்தேன். தங்களது வாழ்த்துகளுக்கும் செய்தி பகிர்ந்தமைக்கும் நன்றி!

      Delete
  5. இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.
    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  6. தங்களின் கவிமாலைக்கு நன்றி!

    தொடர்ந்து எழுதுவதில் இடைவெளிகள் தோன்றினாலும் என்னை இடைவிடாது தொடரும் தங்களைப் போன்ற வலைப்பூ வாசகர்களுக்கு நன்றிகள் பல!

    ReplyDelete