Monday, September 7, 2015

எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? - 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 14

“ரோமானியப் பேரரசிலும் அமெரிக்காவிலும் அடிமைகளின் நிலை எப்படி இருந்தது?

மேஸ்திரிக்கும் அடிமைகளுக்கும் இடையேயான பழைய உறவுகள் தொடர்கின்றன. பெரும்பாலும் சக ஊழியர்களில் ஒருவனாகவே அடிமைகளைக் கருதினர்.

பகட்டுக்காகவும் படாடோபத்திற்காகவும் மற்றும் உண்மையான இலக்கிய ஆர்வத்தினாலும் பணக்காரக் குடும்பங்கள் தங்கள் அடிமைகளை இலக்கியம் மற்றும் கலைகளில் பயிற்றுவித்து வந்தனர்.

ஆவணங்கள் எழுதுபவர்களாக அடிமைகள் நியமிக்கப்பட்டனர்.

அடிமையின் வருவாய் சட்டப்படி அடிமையின் சொந்த சொத்தாகிறது. தனது வருவாய் மூலம் நிலங்கள், வீடுகள், கடைகள் மற்றும் இதர பல உரிமைகளைப் பெறமுடியும்.

அமெரிக்க நீக்ரோக்கள் அடிமையாகக் கருதப்பட்ட போது அவர்கள் புரட்சியின் போது கறுப்பு இன மற்றும் வெள்ளை இன கடற்படை வீரர்களும் மற்றும் படைவீரர்களும் எந்தவித கசப்புணர்ச்சியுமின்றி ஒன்றாக உணவருந்தி இணைந்து போராடினார்கள்.

அடிமைத் தொழிலாளர்கள் எல்லாவிதப் பணிகளுக்கும் உபயோகிக்கப்படுத்தப்பட்டனர். அதில் அதிக புத்திசாலி நீக்ரோக்கள் தொழில் நிபுணர்களாக பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

நூற்பதிலும் நெய்வதிலும் திறமைசாலிகளான நீக்ரோ மகளிர் ஆலைகளில் பணிபுரிந்தனர். வெள்ளைக்காரப் பெண்களுடன் எந்தவித வெறுப்புணர்வோ எதிர்ப்போ இன்றி அவர்கள் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.

ரோமானியப் பேரரசிலும் அமெரிக்காவிலும் இருந்த அடிமைகளின் நிலையுடன் இநதியாவில் தீண்டப்படாதவர்களின் நிலையை இனி ஒப்புநோக்கிப் பார்ப்போம்.

ரோமாபுரியில் இருந்தது போல எத்தனை தீண்டப்படாதவர்கள் நூலகர்களாக, பிறர் கூறக்கேட்டு எழுதுபவர்களாக, சுறுக்கெழுத்தர்களாக பணியாற்றுகின்றனர்?

ரோமாபுரியிலுள்ள அடிமைகளைப் போல எத்தனை தீண்டப்படாதவர்கள் சிறந்த பேச்சாளர்களாக, இலக்கண ஆசான்களாக, தத்துவவாதிகளாக, ஆசிரியர்களாக, மருத்துவர்களாக மற்றும் கலைஞாகள் போன்ற அறிவுபூர்வமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்?

ரோமாபுரி அடிமைகளைப் போல எத்தனை தீண்டப்படாதவர்கள் வர்த்தகம், வியாபாரம், தொழில் துறையில் ஈடுபட்டுள்ளனர்?

தீண்டப்படாதவர்கள் கைவினைஞர்களாக இருந்ததாக ஏதாவது உதாரணம் இருக்கிறதா?

தீண்டப்படாதவன் பள்ளி நடத்தி அதில் பிராமண மாணவர்கள் அவனது காலடியில் அமர்ந்து கல்வி கற்றதாக ஏதாவது உதாரணம் இருக்கிறதா?

எனவே தீண்டப்படாதவர்கள், அடிமைகளைவிட மிகக் கொடூரமான நிலையில் உள்ளனர் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இருக்க முடியாது. மனித வளர்ச்சிக்கு அடிமைத்தனத்தைவிட தீண்டாமை மிகக்கெடுதலானது என்பதே இதன் பொருள்.

இப்படிக் கூறுவதில் ஒரு குழப்பம் இருக்கிறது. சட்டப்படி தீண்டத்தகாதவர்களைவிட மிக மோசமான நிலைமையிலுள்ள அடிமை மக்கள், யதார்த்தத்தில் நன்றாக இருந்தனர். சட்டப்படி அடிமைகளைவிட சிறப்பாக இருந்த தீண்டப்படாதவர்கள் யதார்த்தத்தில் மோசமான நிலையில் இருந்தனர். இந்த குழப்பமான நிலைக்கு விளக்கம் என்ன? கேள்விகளுக்கெல்லாம் முக்கியமான கேள்வி இதுதான்.

சட்டப்படி, சுதந்திரம் கடுமையாக மறுக்கப்பட்ட போதிலும் ஒரு நீக்ரோ அதை வெற்றி கண்டு வளர்ச்சி பெறவும் செழிப்படையவும் உதவியது எது? தீண்டப்படாதவர்களுக்கு சட்டப்படி கொடுக்கப்பட்ட சுதந்திரத்தைப் பறித்தது எது? அவர்களது வாழ்க்கையின் உயிர் சக்தியை உறிஞ்சி அவர்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இருந்தது எது?

சட்டத்துக்கும் பொதுமக்களின் கருத்துக்களுக்குமான உறவினைத் தெரிந்து கொண்டால் இதைப் புரிந்து கொள்வது எளிது.

ஒரு மனிதனின் நடத்தையை நிர்ணயிப்பது சட்டமும், பொதுமக்களின் கருத்துமாகும். அவை தனிப்பட்ட முறையில் செயல்படுவதுடன் பரஸ்பரம் ஒன்றின் மீது மற்றொன்று பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சில சமயம்ங்களில் சட்டம், மக்கள் கருத்துகளைவிட வலிமை பெற்று முன்னுக்குச் சென்று அதைத் தடுத்து தனக்குச் சரி என்று தோன்றும் வழியில் அதை நடத்திச் செல்கிறது. சில சமயம் சட்டத்தைவிட மக்கள் கருத்து வலிமை பெற்றிருக்கிறது; சட்டத்தின் கடுமையைக் குறைப்பதுடன் அதை வலுவிழக்கச் செய்கிறது. சில சமயங்களில் சட்டமும் பொது மக்கள் கருத்தும் ஒன்றுக்கொன்று எதிரியைடாக மோதுவதைப் பார்க்கிறோம். சில சமயங்களில் பொதுமக்கள் கருத்து பலம் பெற்று சட்ட வழிமுறைகளை ஒதுக்கித் தள்ளி அவற்றை செயலற்றதாகவும் ஆக்கிவிடுகிறது.

சட்டத்தால் மறுக்கப்பட்ட ஆளுமையை அடிமைக்கு சமூகம் அளித்தது. சட்டப்படி தீண்டப்படாதவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆளுமை சமூகத்தால் மறுக்கப்பட்டது.

ஏனெனில் இந்துச் சமூகம் தீண்டப்படாதவனை அங்கீகரிக்கக்கூடாது என்பதில் தீர்மானகரமாக இருந்தது. சட்டத்தின் ஆதிக்கம் எப்படியிருப்பினும் ஓர் அடிமைக்கு ஆளுமை இருந்தது. ஆனால் சட்டத்தின் ஆதரவு இருந்தும் தீண்டப்படாதவனுக்கு ஆளுமையில்லை. இந்த வேறுபாடு அடிப்படையானது.

ஓர் அடிமையின் கைகளிலிருந்து காய்கறிகள், பால், வெண்ணெய், தண்ணீர் அல்லது மதுபானம் வாங்குவதை ரோமானிய சமுதாயம், ஒருவேளை தடை செய்திருந்தால், ஓர் எஜமானனால் ஓர் அடிமைக்கு பயிற்சியளித்து அரைகுறை காட்டுமிராண்டித்தனத்திலிருந்து ஒரு பண்பாட்டு நிலைக்கு அவனை உயர்த்தியிருக் முடியுமா? இல்லை என்பது தெள்ளத் தெளிவு. ஏனென்றால் ஓர் அடிமைக்கு எஜமான் பயிற்சி அளிக்கவும், அவனை வளர்ச்சி பெறச் செய்யவும் முடிந்ததன் காரணம் தீண்டப்படாதவர் நிலையில் அவன் வைக்கப்படவில்லை.

அதாவது சமூகம், அடிமையின் ஆளுமையை அங்கீகரித்து அவனைக் காப்பாற்றியது; ஆனால், ஆதே சமயம் தீண்டப்படாதவனை இந்து சமூகம் அங்கீகரிக்காததுடன் மனித உறவுகளுக்கும், பொதுவான நடவடிக்கைகளுக்கும் அருகதையற்றவனாக அவனை நடத்தியதும்தான் அவன் சீரழிந்ததற்குக் காரணம்.”

தொகுப்பாகச் சொன்னால்

1. அடிமைகளுக்கு சமூகத்தில் ஆளுமை இருந்தது. ஆனால் தீண்டப்படாதவர்களுக்கு ஆளுமையில்லாததால் தீண்டாமையே அடிமைத்தனத்தைவிடக் கொடுமையானது.

2. வாழ்க்கை சம்பந்தமான பாதுகாப்பை அதாவது உணவு, உடை, குடியிருப்பு ஓர் அடிமைக்கு சுமையாகவே இருக்கவில்லை. அதை அளிப்பது எஜமானனின் கடமையாக இருந்தது. ஆனால் தீண்டப்படாதவர்களுக்கு வாழ்க்கை சம்பந்தமான பாதுகாப்பை அதாவது உணவளிப்பது, குடியிருப்பு மற்றும் ஆடைகள் கொடுப்பது யாருடைய பொறுப்பும் அல்ல. எனவே தீண்டாமை கொடுமையானது மட்டுமல்ல, நிச்சயமாக கொடூரமானதுங்கூட எனலாம்.

3. அடிமை முறையில் வேலை தேடித்தரும் பொறுப்பு எஜமானர்களுக்கு இருந்தது. ஆனால் அவரவர்களே வேலையை தேடிக் கொள்ள வேண்டும் என்கிற வேலைக்கான போராட்டத்தில் தீண்டப்படாதவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளனவா? அவன் பெற்றுள்ள சமுதாயக் களங்கத்தினால் கடைசியாக வேலை பெற்று முதலில் வேலையிலிருந்து தள்ளப்படுகிறான். தனது வாழ்வை நடத்த வருவாயின்றி வாழ்க்கையை நடத்த வேண்டிய பொறுப்பு தீண்டப்படாதவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளதால், அது அடிமைத்தனத்தைவிட கொடூரமானது.

4. அடிமைத்தனம் கட்டாயமானதாக இருக்கவில்லை. ஒருவன் விரும்பவில்லை என்றால் அவனுக்கு அடிமைத்தனம் கட்டாயமில்லை. ஆனால், ஆதே சமயம், மற்றொருவனை தீண்டத்தகாதவனாகக் கருத ஒரு இந்துவுக்கு “கட்டளை” இடப்பட்டுள்ளது. இந்துவுக்கு இது கட்டாயமாக இருக்கிறது. இந்த விசயத்தில் அவனது சொந்த கருத்து எதுவாக இருப்பினும் அவன் தப்ப முடியாது.

(ஆதாரம்: பாபசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)

தொடர்புடைய பதிவுகள்: 

எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக் கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
நமஸ்காரம்சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!

1 comment:

  1. இரண்டுமே கொடுமையானதுான்... இதில் அடிமைத்தனமும் தீண்டாமையும்தான் நான் முந்தி..நீ முந்தி என்று போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது...

    ReplyDelete