Wednesday, September 2, 2015

ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு!

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12


தமிழகத்தில் தொடரும் தீண்டாமை


பிணத்திலும் தீட்டு


திருவண்ணாமலை மாவட்டம், மேல செட்டிப்பட்டி கிராமத்தில் அருந்ததியர் பிணத்தை தெரு வழியாக எடுத்துச் செல்ல ஆதிக்கச் சாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கரடு முரடான பாதையில் சுடுகாட்டிற்கு சுமார் ஒன்றரை கி.மீ தூரம் சுற்றிச் சென்றனர் அருந்ததியர்கள். தெருவழியாக உடுத்துச் செல்ல ஏற்பாடு செய்வதற்குப் பதிலாக சுற்றிச் செல்லும் பாதையை சரி செய்வதாகக்கூறி சமாதானம் செய்துள்ளனர் அரசு அதிகாரிகள். (சத்தியம் தொலைக்காட்சி - 22.07.2015).


தீண்டாமையால் தலைமறைவு வாழ்க்கை


சிவராமகிருஷ்ணன் என்கிற தாழ்த்தப்பட்ட இளைஞர், 28 வயதான விஜயலட்சுமி என்கிற வன்னியர் சாதி பெண் ஒருவரை மார்ச் 2, 2015 ல் சென்னை கோவில் ஒன்றில் இந்து முறைப்படி காதல் திருமணம் செய்து கொள்கிறார். பெண்ணின் தந்தை முதலில் ஒப்புக் கொண்டாலும் சாதிக்காரர்களின் அழுத்தத்தால் பிறகு திருமணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். அச்சுறுத்தலுக்கு பயந்து சிவராமகிருஷ்ணன் தலைமறைவாக வாழ்வதால் அவர் சிங்கப்பூரில் பார்த்து வந்த ‘சேப்டி புரமோட்டர்’ (safety promoter) வேலையும் பறிபோனது.

கடலூர் மாவட்டத்திலிருந்து தனது உறவினர்கள் தொடர்ந்து தங்களை அச்சுறுத்தி வருவதால் பாதுகாப்பு கோரி விஜயலட்சுமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்றமும் இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது. (THE HINDU: 26.07.2015 & 02.09.2015).

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள வேப்பமரத்தூர் கிராமம். வன்னிய சாதியைச் சார்ந்த  G.சுரேஷ் (வயது:30) தாழ்த்தப்பட்டவரான  s.சுதா (வயது:23என்பவரை காதல் மணம் புரிந்து ஓசூரில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கோவில் திருவிழாவிற்கு இவர் ஊருக்கு வந்த போது வன்னிய சாதியினர் இவரை ஊர் விலக்கம் செய்ததோடு, கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் ஊர் மக்கள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் தடை விதித்தனர்

ஒரு உயர் சாதிப் பெண்ணை ஒரு தாழ்த்தப்பட்டவன் காதலித்தால் படுகொலை செய்வதும், ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஒரு உயர்சாதி ஆண் காதலித்தால் ஊர் விலக்கம் செய்வதும் என தீண்டாமை பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. . (THE HINDU: 24.07.2013)

கனவில்கூட தீண்டாமை

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் சாமி கும்பிடுவதில் சில ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் பிரச்சனை இரந்து வருகிறது. 2014ம் ஆண்டு கோட்டாட்சியர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்பட்டது.

 2015 ஜீலை மாதத்தில் ஒரு நாள் சிலம்பூர் காலனியைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் கனவில் கடவுள் தோன்றி சிலை வைக்க வேண்டும் என சாமி கூறியதாக  கோவிலுக்கள் சிலை வைக்க காலனி மக்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி 31.07.2015 அன்று கோவிலில் பொங்கல் வைத்து பூஜை செய்ய தீர்மானித்துள்ளனர். இதற்கு சாதி இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வட்டாட்சியர் ராஜகோபால் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவிலுக்கு பலத்த பாதுகாப்பும் போட்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்டவன் என்றால் அவனுக்கு கனவில்கூட கடவுள் வரக்கூடாது. அதே கடவுள் சாதி இந்து ஒருவனின் கனவில் வந்து சிலை வைக்க வேண்டும் என்று சொன்னால் அதை ஊரே கூடி கொண்டாடும்.

இந்த லட்சணத்தில் அந்தக் கோவில் அரசு புறம்போக்கு நிலத்தில்தான் உள்ளதாம். (தினமணி: 01.08.2015).

வாகனத்தின் ஒலியிலும் தீண்டாமை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி மாதத்தில் ஒவ்வொரு சாதியினரும் வெள்ளிக்கிழமை அன்று விழா எடுப்பது வழக்கம். இரண்டாவது வெள்ளி அன்று தாழ்த்தப்பட்டவர்களும், மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று வன்னியர்களும் விழா எடுப்பார்கள். கோவில் திருவிழா தொடர்பாக ஏற்கனவே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கோவில் திருவிழாவின் போது தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் வாகனங்களில் ஒலி எழுப்பி ரகளை செய்தார்கள் என்கிற முகாந்திரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதலாக அதை மாற்றி உள்ளனர் சாதி இந்துக்கள்.

இங்கே வாகனத்தின் ஒலி பிரச்சனை அல்ல. தங்களுக்கு சமமாக தாழ்த்தப்பட்டவர்கள் விழா எடுக்கிறார்களே என்கிற தீண்டாமையின் வெளிப்பாடுதான் சாதி இந்துக்களிடம் குடி கொண்டுள்ளது. (தினமணி: 11.08.2015).

தீண்டாமை வேலி!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகில் உள்ள பி.உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சின்ன கருப்பர் கோவிலுக்குச் செல்லும் பாதையை தலித்துகள் செல்லா வண்ணம் வேலி அமைத்துள்ளனர் சாதி இந்துக்கள். கோவிலை சுத்தமாக வைத்துக்கொள்ளத்தான் வேலி என வாதிடுகின்றனர் சாதி இந்துக்கள். சுத்தம் என்றால் சுகாதாரம் என்கிற பொருளில் அவர்கள் சொல்வதெல்லாம் ஒரு ஏமாற்று. தாழ்த்தப்பட்டவர்கள் அந்தப் பாதையை பயன்படுத்தக் கூடாது; அப்படி பயன்படுத்தினால் கோவில் தீட்டுப்பட்டு அசுத்தாமாகிவிடும் என்பதுதான் அதன் உள்ளார்ந்த பொருள். அதற்குத்தான் இந்த வேலி.  (THE HINDU: 11.08.2015).

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள உத்தபுரத்தில் 1989 ல் ஆதிக்கச் சாதியினரான பிள்ளைமார்கள், தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் பகுதிக்கு வரக்கூடாது, தங்கள் கோயிலில் வழிபாடு செய்யக்கூடாது என 600 மீட்டர் நீளத்திற்கு எழுப்பியிருந்த சுவர் தீண்டாமையின் அடையாளம்தானே!

 ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு!

விழுப்புரம் மாவட்டம், சேஷசமுத்திரத்தில் 15.08.2015 அன்று தாழ்த்தப்பட்டவர்கள் திருவிழாவிற்காக செய்திருந்த அம்மன் தேர் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டதோடு. தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகள் சாதி இந்துக்களால் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம், தாழங்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீசெங்கேணியம்மன் கோவில் திருவிழாவில் “சாதிப்பிரச்சனை செய்வது கடவுளுக்கே பொருக்காது; சமாதானம் ஏற்படவில்லை எனில் கோவிலை மூடிவிடுங்கள்!” என சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் கவுல் தலைமையிலான அமர்வு உத்தரவு ஒன்றை பிரப்பித்துள்ளது. (சன்நியூஸ்: 20.08.2015)

இதைத்தானே சாதி இந்துக்களும் எதிர்பார்க்கிறார்கள். நீதி மன்றத்தின் மூலமோ அல்லது கம்யூனிஸ்டுகள் மற்றும் பல்வேறு சாதிகளில் உள்ள ஜனநாயக சக்திகள் தலையிடும் போதோ, எதிர்த்து நிற்க முடியாமல் தங்களுக்கு கோவிலே வேண்டாம் என சாதி இந்துக்கள் கோவிலை பூட்டவோ அல்லது கோவில் சாவியை ஒப்படைக்கவோதானே முன்வருகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் தங்களோடு ஒரு போதும் கோவிலை பயன்படுத்தக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்ககையாகவே உள்ளனர் சாதி இந்துக்கள்.

திருச்சி, உறையூரில் குழுமாயி-குழுந்தலாயி அம்மன் திருவிழா மிகவும் பிரபலம். அறிவியல் வளர்ந்தாலும் கிராமங்கள் மாநகரங்களாக வளர்ச்சி பெற்றாலும், இதுபோன்னற திருவிழாக்களின் போது அவை குக்கிராமங்களாக மாறிவிடுவதும், மக்கள் காட்டுமிராண்டிக் காலத்திற்குத் தங்களை ஆளாக்கிக் கொள்வதையும் காணமுடியும். ஆடுகளின் கழுத்தை அறுத்து அதிலிருந்து கொட்டும் இரத்தத்தை சளைக்காமல் குடித்து பிரமிப்பூட்டும் நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.  இரத்தம் குடிப்பதில் மட்டுமல்ல சாதிய ஒடுக்குமுறையிலும் தாங்கள் காட்டுமிராண்டிகள்தான் என்பதையும் ஒவ்வொரு ஆண்டும் நிரூபித்து வருகின்றார்கள்.

தில்லைநகர் ஐந்தாவது குறுக்குத் தெருவிலில் இருக்கிறது குழுமாயி அம்மன் கோவில். அலங்கரிக்கப்ட்ட அம்மன் இங்கிருந்து புறப்பட்டு பறையர்கள் வாழும் காந்திபுரம் வழியாக உறையூர் செட்டித் தெருவை சென்றடையும். பூசைக்காக அம்மன் காந்திபுரத்தில் நிற்காது. படையாச்சி,வெள்ளாளர்,  செட்டியார், முத்தரையர் என பிற உயர்சாதி தெருக்களில் நாள் வாரியாக உலா வரும் அம்மன் அங்குள்ள மக்களுக்கு அலங்காரத்துடன் காட்சியளிப்பாள். உலா முடித்து மீண்டும் அம்மன் தில்லைநகருக்கு வரவேண்டும். அப்படி வரும் போது காந்திபுரத்திற்குள் நுழையும் முன்பு செட்டித் தெருவில் நிறுத்தப்படும். அம்மனின் மொத்த அலங்காரமும் அங்கே உருவப்பட்டு அம்மனமான அம்மன் மட்டுமே காந்திபுரத்திற்குள் நுழையும். உருவப்பட்ட இந்த அம்மனைத்தான் காந்திபுரம் பறையர்கள் பூசை செய்து வழிபட வேண்டும். இரத்தம் குடிக்கும் காட்டுமிராண்டித் தனத்தைவிட இது மிகக் கொடிய காட்டுமிராண்டித்தனம்.

இக்கொடுமையை எதிர்த்து 1996-1997 வாக்கில் காந்திபுரம் மக்கள் ... தலைமையில் போராடினார்கள். அரசு சார்பில் ஒரு பஞ்சாயத்தும் கூட்டப்பட்டது. அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் அதில் கலந்து கொண்டனர். அம்மனின் அலங்காரத்தை கலைக்காமல் அப்படியே அனுப்பி வையுங்கள் என்பதுதான் காந்திபுரம் மக்களின் கோரிக்கை. காலம் காலமாக உள்ள முறையை மாற்ற முடியாது என பிற உயர் சாதியினர் அனைவரும் ஒரே குரலில் பேசினர். காந்திபுரம் மக்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால் கோவில் சாவியை நீந்களே வைத்துக் கொண்டு திருவிழாவையும் நீங்களே நடத்திக் கொள்ளுங்கள். எங்களுக்கு அம்மனும் வேண்டாம்; திருவிழாவும் வேண்டாம் என பிற உயர் சாதியினர் அனைவரும் ஏகக் குரலில்  பேசினர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒன்றிணைவதில் மட்டும் பிற சாதிக்காரர்களுக்குள் அப்படி ஒரு பிணைப்பு.

காந்திபுரம் மட்டுமல்ல விழுப்புரம் மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் வி.வி.மு தலைமையில் கோவிலில் வழிபாட்டு உரிமை கேட்ட போது கோவில் சாவியைக் கொடுத்துவிட்டார்கள் வன்னியர்கள், ரெட்டியார்கள் உள்ளிட்ட பிற உயர் சாதியினர்.

கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிபாட்டு உரிமை கேட்டால் சாதி இந்துக்கள் ஒன்றுகூடி தங்களுக்கு கோவிலே வேண்டாம் என கோவில் சாவியை ஒப்படைக்க முன்வந்தார்களே ஒழிய தாழ்த்தப்பட்டவர்களின் வழிபாட்டு உரிமையை ஏற்கத் தயாராக இல்லை.

ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு! என்பதே சாதி இந்துக்களின் தீண்டாமை சாதுர்யம்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், துங்கமுத்தூர் கிராமம், சின்ன பொம்மன் சாலை என்ற குக்கிராமத்தில் வசிக்கும் அரசு துப்புரவுத் தொழிலாளி திரு.பழனி அதே ஊரைச்சேர்ந்த ஆதிக்க சாதிவெறி கவுண்டர்களால் கட்டிவைக்கப்பட்டு சித்ரவதை செய்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். தடுக்கச் சென்ற திரு. பழனியின் மனைவியும் சாதிவெறியர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான கோகுல் ராஜ் என்ற பொறியியல் மாணவர் ஒரு கவுண்டர் சாதப் பெண்ணுடன் சென்றார் என்பதற்காக கவுண்டர் சாதியைச் சேர்ந்த யுவராஜ் என்கிற சாதி வெறியன் கொகுல்ராஜை ஜீன் 23, 2015 அன்று படுகொலை செய்து பள்ளிப்பாளையம் ரயில்வே லைனில் வீசியுள்ளான்.

ஒரே கல்லூரியில் உடன் பயிலும் மாணவியானாலும் தாழ்த்தப்பட்டவனோடு பேசவோ, செல்லவோ கூடாது என்பதுதான் ஆதிக்கச் சாதி வெறியர்களின் தீண்டாமை கோட்பாடு.

தருமபுரி மாவட்டம், நத்தம் காலனியைச் சேர்ந்த  தாழ்த்தப்பட்டவரான இளவரசனும், செல்லன் கொட்டாயைச் சேர்ந்த வன்னியர் சாதியைச் சேர்ந்த திவ்யாவும் காதலித்து 10.10.2012 ல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு வன்னிய சாதி வெறியர்கள் இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 07.11.2012 அன்று தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளைச் சூறையாடி தாக்குதல் நடத்தினர். வன்னிய சாதி வெறியினர் இளவரசன் மீது தொடுத்த தொடர் தாக்குதல் மற்றும் தொல்லைகளால் 04.07.2013 அன்று தருமபுரி இருப்புப் பாதையில் பிணமாகக் கிடந்தார் இளவரசன்.

காதலர்களைப் பிரிப்பது மட்டுமல்ல அவர்களைப் படுகொலை செய்யும்வரை சாதி இந்துக்களின் தீண்டாமை வெறி அடங்குவதில்லை.

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி இந்துக்களால் ஏவி விடப்படும் தீண்டாமை வன்கொடுமைகளைப் பட்டியலிட்டால் அது மாளாது.

தொடர்புடைய பதிவுகள்:

நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை!

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக் கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
நமஸ்காரம்சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!

எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!


 

No comments:

Post a Comment